அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்துள்ள பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட் !

0
144
Amazon Opens Workers Less Supermarket Amazon Go

(Amazon Opens Workers Less Supermarket Amazon Go)

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமேசான் நிறுவனம் சூப்பர் மார்க்கெட்டை நேற்று அறிமுகம் செய்தது.

‘அமேசான் கோ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.

Image result for Amazon Opens Workers Less Supermarket Amazon Go

இங்கு வாங்கும் பொருட்களுக்கு ‘கியூ’ வரிசையில் நின்று பில் போட வேண்டியதில்லை.

சூப்பர் மார்க்கெட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா மற்றும் சென்சார்கள் வாடிக்கையாளரை அடையாளம் கண்டு அவர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் திரும்ப வைக்கும் பொருட்களை பதிவு செய்யும். பின்னர் அவர்கள் வெளியே செல்லும்போது பொருட்களுக்கான தொகை கணக்கிடப்பட்டு அவர்களின் கிரெடிட் கார்டில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.

Image result for Amazon Opens Workers Less Supermarket Amazon Go

முன்னதாக அமேசான் கோ சூப்பர் மார்க்கெட்டின் தரை தளத்துக்கு செல்லவேண்டும்.

அங்கு ஸ்மார்ட்போனில் அமேசான் கோ என்ற செயலி மூலம் வாடிக்கையாளர்கள் ‘கியூ ஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.

2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் திகதி அமேசான் கோ சூப்பர் மார்க்கெட் ஊழியர்களுக்காக சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தது. தற்போது இது நடைமுறைக்கு வந்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here