பெண் தாதியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற இந்திய டாக்ட்டர் கைது!

0
374
America Police Arrested Indian Doctor Attempts Murder Nurse

(America Police Arrested Indian Doctor Attempts Murder Nurse)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நசாயு பல்கலைக்கழக மருத்துவ மையம் அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெங்கடேஷ் சாஸ்தாகொனர் (44) என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 51 வயதான நர்ஸ் ஒருவர் போலீசில், வெங்கடேஷ் மீது ஒரு புகார் அளித்தார்.

அதில் வெங்கடேஷ் அந்த நர்சின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து வெங்கடேசை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நர்ஸ் கூறியிருப்பதாவது,

கடந்த 22-ம் திகதி வெங்கடேசிடம் சிகிச்சை பெற்றுவந்த ஒரு நோயாளிக்கு தவறான நேரத்தில் ஊசி போட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தனது மேல் சட்டையில் இருந்த கயிற்றினால் அவரது கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு வெங்கடேஷ் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாக்டர் வெங்கடேசின் வழக்கறிஞர் மெல்வின் ரோத் கூறுகையில்,

‘அவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருந்து வந்தனர்.

வெங்கடேஷ் மிரட்டும் எண்ணத்தில் அவ்வாறு செய்துள்ளார். அந்த கயிறு நர்சின் கழுத்தை தொடக்கூடவில்லை’, என்றார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here