தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரிக்கு வந்த சோதனை!

0
602
Lankan High Commissioner London suspend Brigadier Priyanka Fernando

(Lankan High Commissioner London suspend Brigadier Priyanka Fernando)

இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்தன்று பிரித்தானியா இலங்கை தூதரகத்தின் முன் நடைபெற்ற சுதந்திரதின எதிர்ப்பு போராட்டத்தில் கொலைமிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி இன்று அதிரடியாக பதவி நீக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து களுத்தை வெட்டுவேன் என்று தொனியில் குறித்த அதிகாரி விடுத்த கொலை மிரட்டல் காணொளி சர்வதேச ஊடகங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து இன்று (6.02.2017) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகாரியான பிரியங்கா பெர்னான்டோ பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானியத்துக்கு இந்த உத்தரவை பிறப்பத்துள்ளது.

பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ ஆன்றை ஆர்ப்பாட்டத்தின் போது உயர்ஸ்தானிகத்தின் வெளியே வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்ற சைகையோடு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விரைந்து செயற்பட்ட மனித உரிமைகள் சட்டத்தரணி கீத் குலசேகரம் குறித்த காணொளி தொடர்பில் அனைத்து கட்ட நகர்வுகளையும் மேற்கொண்டதனையடுத்து சர்வதேச ஊடகங்கள் உட்பட சமூக வலைத்தளங்களிலும் அது வைரலாக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here