ஆண் சிறை கைதியை பாலியல் அடிமையாக்கிய பெண் காவல் அதிகாரிக்கு தண்டனை!

0
1614
America Female Jail Officer Abuse Male Accused William Cordoba

(America Female Jail Officer Abuse Male Accused William Cordoba)

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வில்லியம் கார்டோபா எனும் கைதி ஒருவர் பெண் காவல் அதிகாரியால் பாலியல் அடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

57 வயதான வில்லியம் கார்டோபா கொலை மற்றும் திருட்டு வழக்குகளின் கீழ் ஆயுள் தண்டனை பெற்றுவருகிறார்.

இவர் இருந்த சிறையில் சில்வியா புல்டோ என்பவரும் பெண் காவல் அதிகாரியாக இருந்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு தனக்கு உதவியாளராக இருக்குமாறு வில்லியம்மை பெண் காவலர் சில்வியா நியமித்துள்ளார்.

இதனால் சில்வியாவின் அலுவலக அறையிலேயே வில்லியமும் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் வில்லியம் கணிணியில் வேலை செய்து கொண்டு இருக்கும்போது, சிறை பெண் காவல் அதிகாரியான சில்வியா கைதி வில்லியமிடம் தவறாக நடந்துள்ளார்.

மேலும் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்துகொண்டால் வில்லியம் மீது உள்ள வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய உதவியாக ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார்.

இதனால் வேறுவழியின்றி வில்லியம், சில்வியாவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

Image result for Convicted killer William Cordoba wins damages over claim he was prison worker's 'sex slave'

ஆனால் நாட்கள் செல்ல செல்ல, பெண் காவலர் சில்வியா தன்னை ஏமாற்றி ஒரு பாலியல் அடிமை போல நடத்துவது வில்லியம் கார்படோவிற்கு தெரியவந்துள்ளது.

இதனால் சில்வியாவின் விருப்பத்திற்கு இணங்க மறுத்துள்ளார் வில்லியம். இதனால் ஆத்திரமுற்ற சில்வியா, வில்லியம் தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றதாக குற்றம் சுமத்தி அவரை 9 மாதங்கள் தனிமை சிறையில் அடைத்தார் சில்வியா.

வில்லியம் தன்னை பாலியல் வன்முறை செய்ய முயன்றதாக சில்வியா தொடர்ந்த வழக்கில் சில்வியா குற்றவாளி என கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் வில்லியம் கார்படோவிற்கு இந்திய மதிப்பில் 4 கோடியே18 லட்சத்து 17 ஆயிரத்து 750 ரூபாய் நஷ்டயீடு வழங்கவும் உத்தரவிட்டது.

சிறையில் இருந்த கைதி ஒருவரை பெண் காவல் அதிகாரி பாலியல் அடிமையாக பயன்படுத்திய சம்பவம் கைதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here