பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சரை மிரள வைத்த மியன்மார் கலவரம் !

0
131
British Foreign Minister Boris Johnson Visits Myanmar Meets Suu Kyi

(British Foreign Minister Boris Johnson Visits Myanmar Meets Suu Kyi)

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் அரசு முறைப்பயணமாக மியான்மர் சென்றுள்ளார்.

நேற்று மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சாங் சூகியை சந்தித்து பேசினார். இருவரும் ரோஹிங்கியா பிரச்சனை குறித்து பேசினர்.

Related image

 

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜான்சன், ‘ரோஹிங்கியா மக்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உண்மையில் ரோஹிங்கியா பிரச்சனை குறித்து சூகி முழுவதும் புரிந்து கொண்டாரா என தெரியவில்லை. அவர் ஹெலிகாப்டரில் சென்று நாங்கள் பார்த்ததை பார்க்க வேண்டும். அவருடைய தலைமையில் நம்பிக்கை உள்ளது. ஆனால் இங்கு நடக்கும் பிரச்சனையை பார்க்கும் போது மிகுந்த கவலையளிக்கிறது.

மேலும் இது போன்ற கொடூரத்தை நான் என் வாழ்நாளில் பார்த்தது இல்லை.

நூற்றுக்கணக்கான கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான தலைமை இல்லை. ஐக்கிய நாடுகள் நிறுவனத்துடன் இணைந்து மக்களை தங்கள் சொந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும்’ என கூறினார்.

மியான்மருக்கு செல்வதற்கு முன் ஜான்சன் வங்காளதேசத்திற்கு சென்றார். அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து பேசினார். மேலும் காக்ஸ் பசார் பகுதியில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்தார்.

Image result for British Foreign Minister Boris Johnson Visits Myanmar Meets Suu Kyi

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here