சிங்கப்பூரில் போதைமருந்து கடத்தலில் மரண தண்டனை பெற்றவர் விடுதலை!

0
125
Singapore High Court Released Death Penalty Accused

(Singapore High Court Released Death Penalty Accused)

சிங்கப்பூரில் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவரை மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

இம்மாதிரியான தீர்ப்பை நீதிமன்றம் அளிப்பது மிகவும் அரிது. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாம் சிங்கப்பூருக்குள் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தபோது அதில் போதைப்பொருள் இருந்த விஷயம் தமக்கு தெரியாது என்பதை மலேசியரான திரு கோபு ஜெயராமன் நிரூபித்தார்.

மோட்டார் சைக்கிளில் தமக்குத் தெரியாமல் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்பதை உயர்நீதிமன்றம் முறை யாகச் சீர்தூக்கிப் பார்க்கவில்லை என்ற வாதத்தை அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முன் வைத்தார்.

Image result for Death Penalty

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் இருவர் திரு கோபுவுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தனர்.

திரு கோபு கைது செய்யப்பட்ட நாளன்று அவர் சிங்கப்பூருக்கு வந்ததற்காகச் சொன்ன கார ணத்தை அவருக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி டே யோங் குவோங் ஏற்கவில்லை.

தாம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை தமது நண்பரிடமிருந்து இரவல் வாங்கியதாக திரு கோபு சொன்னதும் நம்பகரமானதாக இல்லை என்று நீதிபதி டே தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here