தென் ஆபிரிக்க அதிபர் ஷுமாவுக்கு பதவி விலகும் காலக்கெடு விதிப்பு !

0
130
South Africa A.N.C Party Gives Expiry President Jacob Zuma Resignation

(South Africa A.N.C Party Gives Expiry President Jacob Zuma Resignation)

தென் ஆபிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஷூமா (75) கடந்த 2009-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

இவர்மீது ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆபிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது.

Image result for South Africa A.N.C Party Gives Expiry President Jacob Zuma Resignation

சமீபத்தில் இந்தியரான குப்தா குடும்பத்துடன் இணைந்து ஜேக்கப் ஷூமா ஊழல் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. அதை இருவரும் மறுத்துள்ளனர்.

இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் ஷூமா மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

அவருக்கு ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி எம்.பி.க்களும் எதிராக உள்ளனர். எனவே அவர் ஓட்டெடுப்பில் தோல்வி அடையும் நிலை உள்ளது.

ஆகவே அவர் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி வலியுறுத்தியது.

ஆனால் பதவி விலக அவர் மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, வரும் வியாழக்கிழமைக்குள் ஷுமா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சி கெடு விதித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் அதிபர் தபோம்பெகி என்பவருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. அவர் பதவி விலகியதும் ஷூமா புதிய அதிபரானது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here