கேப்டவுனுக்கு தண்ணீர் வழங்கிய தென்னாபிரிக்கத் தமிழர்கள்

0
190
South Africa Tamils severe Cape Town water festival provided

(South Africa Tamils severe Cape Town water festival provided)

தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவி வருவதால் தைப்பூசக் காவடித் திருவிழாவை முன்னிட்டு தென்னாபிரிக்கா வாழ் தமிழர்கள் தண்ணீர் வழங்கியுள்ளனர்.

 கடந்த மூன்றாண்டுகளாக மழை பொய்த்ததால், அணைகளில் நீர் தேக்கம் குறைந்து,வரலாற்றில் இல்லாத ஒரு கடுமையான வறட்சியை கேப்டவுன் சந்தித்து வருகிறது.

தண்ணீர் பயன்பாட்டை குறைத்து வறட்சியை தவிர்க்கும் முகமாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு நூறு லிட்டர் தண்ணீர் அளித்து வந்த நிலையில் தற்போது வெறும் 50 லிட்டர் மட்டுமே அளிக்கப்பட்டு வருகின்றது.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் கை கழுவுவதற்குப் பதிலாக ரசாயன சுத்திகரிப்பான்களை பயன்படுத்துமாறும், வாரத்தில் ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் வாழ்வதற்குப் பழகிக்கொள்ளுமாறும் அரசு மக்களை கோரியுள்ளது என அங்குள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையையும் (water less Wednesday) எனப்படும் தண்ணீர் இல்லாத நாளாக எண்ணி மக்கள் தண்ணீர் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனவும் தற்காலிக சட்டமியற்றப்படுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் தென்னாபிரிக்காவிற்கு கரும்பு தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக அங்கு வசித்துவருகின்றனர்.

தென்னாபிரிக்காவின் தென்மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கேப்டவுன் நகரில், சுமார் மூன்று கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் இரண்டு சதவீதத்தினர் வசித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி அன்று கேப்டவுன்னில் எந்த குழாயிலும் தண்ணீர் வாராது என்றும் அந்த நாளை ‘ஸீரோ டே’ (Zero Day) என்றும் கேப்டவுன் நகராட்சி அறிவித்துள்ளது.​

இந்நிலையில் தென்னாபிரிக்காவில் வசிக்கும் தமிழ் வம்சாவளி மக்கள் தைப்பூசத்தை முன்னிட்டு, தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கும் கேப்டவுன் மக்களுக்கு உதவ தண்ணீர் பாட்டில்களைக் கோவில்களில் சேமித்து, தேவையானவர்களுக்கு அளித்ததாக கௌடெங் பகுதியில் உள்ள தமிழர் கூட்டமைப்பின் தலைவர் கோவலன் வீரமுத்து தெரிவித்தார்.

இனி வரும் ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்தின் போது ஏழை எளியோருக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் இரண்டு பாட்டில்களை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஏழை,பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் தண்ணீர் பஞ்சத்தின்போது தவிக்கும் மக்களுக்கு உதவுவதை முருகனுக்கு செய்யும் சேவையாக எண்ணுகிறோம்,” என்று கோவலன் வீரமுத்து மேலும் தெரிவித்தார்.

(South Africa Tamils severe Cape Town water festival provided)

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here