மலேசியா பிரதமரை கோமாளியாக்கியவருக்கு சிறை !

0
155
Malaysian Artist Published Prime Minister Clown Face Jailed

(Malaysian Artist Published Prime Minister Clown Face Jailed)

மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா கேலிச்சித்திரம் தீட்டி இணையதளத்தில் வெளியிட்டார்.

Image result for Fahmi Reza

இந்த ஓவியம் இணையத்தில் பரவலடைந்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின்போது, பாஹ்மி ரேசா மீது ஆபாசமான, தவறான, அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற, ஒரு நபரை தொல்லை செய்ய விரும்புகிற ஆன்லைன் உள்ளடக்கத்தை பரப்பியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Related image

விசாரணை முடிந்து உள்ள நிலையில், அவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், 7 ஆயிரத்து 700 டாலர் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இது தொடர்பாக பாஹ்மி ரேசாவின் வக்கீல் சியாரெத்சான் ஜோஹன் கூறும்போது,

“இந்த தண்டனை எதன் அடிப்படையில் விதிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிபதி எதுவும் குறிப்பிடவில்லை. இதை எதிர்த்து அப்பீல் செய்வோம்” என குறிப்பிட்டார்.

இதே போன்று மற்றொரு கோர்ட்டிலும் பாஹ்மி ரேசா இன்னொரு வழக்கை சந்தித்து வருகிறார்.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், அரசு பணத்தில் பல கோடி ஊழல் செய்ததாக எழுந்து உள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அரசுக்கு எதிராக செயல்படுகிற எதிர்க்கட்சி தலைவர்கள், ஆர்வலர்களுடன் இணைந்து, பாஹ்மி ரேசா செயல்பட்டு வருகிறார். போராட்டங்களிலும் பங்கு எடுத்து வருகிறார்.

இந்த ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடுகிற இணைய தளங்களை மலேசிய அரசு முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here