சோமாலியா இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் பலியாகியோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு!

0
107
Somalia Double Terrorism Bomb Attack Killed 45 People

(Somalia Double Terrorism Bomb Attack Killed 45 People)

கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து நேற்று முன்தினம் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும், 20-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

முதல் தாக்குதல் தற்கொலைப்படை பயங்கரவாதி காரில் வெடிகுண்டு பொருள்களை நிரப்பி வெடிக்கச் செய்தான்.

Image result for Somalia Double Bomb Attack Killed 45 People

இரண்டாவது தாக்குதல் உள்ளூர் அரசு தலைமை அலுவலகங்களை குறி வைத்து நடத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள் அமைந்த பகுதியில் இருந்த சோதனை சாவடி மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஒரு பயங்கரவாதி வெடிக்கச் செய்தான்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்த 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு அல்-கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருக்கும் அல்-ஷபாப்அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதத்தில் மொகடிசு நகரில் அல் ஷபாப் தீவிரவாதிகள் வெடிபொருள் நிரப்பிய லாரியை வெடிக்க செய்ததில் சுமார் 500-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here