இனிமேல் ஏவுகணை சோதனை இல்லை! அமெரிக்காவிடம் அடிபணிந்த வடகொரியா!

0
226
North Korea President Announces No More Missile Tests

(North Korea President Announces No More Missile Tests)

உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறியும் வடகொரிய அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

இதனால், அந்த நாட்டின் மீது ஐ.நா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடை விதித்தன.

எனினும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஏவுகணை சோதனைகள் எதுவும் வடகொரியா நடத்தவில்லை.

இதற்கிடையே, கடந்த மாதம் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வடகொரியா தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் சற்றே தனிந்தது.

நீண்ட நாட்களாக இருந்த பகையை முடிவுக்கு கொண்டு வரும் இரண்டாவது முன்னேற்ற நடவடிக்கையாக, வடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இயூய்-யாங் தலைமையில் 10 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்திருந்தார்.

இந்த குழு, நேற்று வடகொரியா சென்று அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்து பேசியது.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இந்த சந்திப்பில் தென்கொரிய பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கிம் விருப்பம் தெரிவித்ததாகவும் ஆனால், அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒதுக்க அமெரிக்கா கோரிக்கை விடக்கூடாது என அவர் நிபந்தனைகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் முன்னேற்ற நடவடிக்கையாக அடுத்த மாதம் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு தலைவர்கள் பேசும் ஹாட்லைன் வசதியை ஏற்படுத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது.

சந்திப்பை அடுத்து தென்கொரிய பிரதிநிதிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் இரவு விருந்து அளித்துள்ளார்.

இந்த விருந்தில் கிம்-மின் மனைவி, சகோதரி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது, ஏவுகணை சோதனைகள் இனி அதிகம் இருக்காது என கிம் கூறியதாக தென்கொரிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் திடீரென மனம் மாறியுள்ளது தென்கொரியாவை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here