டிரம்ப் – கிம் நேரடி பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவிப்பு!

0
112
President Trump - President Kim Decided Direct Peace Talk

(President Trump – President Kim Decided Direct Peace Talk)

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் நிலவுகிறது. வட கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Image result for President Trump - President Kim Decided Direct Peace Talk

வடகொரியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடை விதித்து வருகிறது.

மேலும் பல நாடுகள் தடை விதிக்க ஐ.நா.சபையை வலியுறுத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா மீது வடகொரியா கடும் ஆத்திரத்தில் உள்ளது.

அமெரிக்கா மீது அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்த போவதாக மிரட்டல் விடுத்தது. அதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்தது.

போர்க்கப்பல்கள் மற்றும் ராணுவ வீரர்களை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்கா அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இவர்களின் மோதலால் கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்திருந்தது.

இச்சூழ்நிலையில் தென்கொரியாவில் நடந்த குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்து கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை குறைந்து சுமூகநிலை தொடங்கி உள்ளது.

அதை தொடர்ந்து தென்கொரிய அதிகாரிகள் குழு வடகொரியா சென்றது. அங்கு அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

Image result for President Trump - President Kim Decided Direct Peace Talk

அப்போது கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதட்டத்தை தணிக்க வடகொரியா அணுஆயுத சோதனை நடத்துவதை கைவிட வலியுறுத்தப்பட்டது.

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாங் கியூ-யாங் அமெரிக்கா சென்றார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து தனது வடகொரிய பயணம் குறித்து விளக்கினார். அதை தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்தார்.

இவர்களது சந்திப்பு வருகிற மே மாதம் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அதிபர் டிரம்ப், துணை அதிபர் மைக் டென்ஸ் ஆகியோருக்கு சாங் கியூ யாங் நன்றி தெரிவித்துள்ளார்.

டிரம்ப்-கிம் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here