சவூதியில் சிங்கத்துடன் விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த கதி! (வீடியோ இணைப்பு)

0
485
Saudi Arabia Allowed Lion Cage Child Played Attack

(Saudi Arabia Allowed Lion Cage Child Played Attack)

சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் ஆண்டுதோறும் ஜெடா வசந்த விழா நடைபெறும்.

இந்த விழாவில் சவுதி அரேபியாவின் பாரம்பிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் பல விளையாட்டுகள் அமைக்கப்படும்.

இந்தாண்டு நடைபெற்ற வசந்த விழாவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் புதிய விளையாட்டை அறிமுகப்படுத்தினர்.

அதன்படி பயிற்சி அளிக்கப்பட்ட சிங்கக்குட்டி அடைக்கப்பட்ட கூண்டிற்குள் சிறுவர்களை விளையாட அனுமதித்தனர்.

குழந்தைகளும் ஆர்வத்துடன் சிங்கக்குட்டியுடன் விளையாடினர். அவர்களுக்கு பாதுகாப்பாக சிங்கத்திற்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் உள்ளே இருந்தார்.

சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது சிங்கக்குட்டி திடீரென ஒரு சிறுமியின் தலையை கடித்தது. அதைக்கண்ட சிறுவர்கள் பயந்தனர்.

கடின முயற்சிக்கு பின் சிறுமியை பயிற்சியாளர் மீட்டார். சிறுமி உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார்.

இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் பரவி வைரலாக பரவி வருகிறது.

வீடியோவை பார்த்த பலர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

அலட்சியமாக செயல்பட்ட பயிற்சியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பல எதிர்ப்பிற்கு பின் விலங்குகள் பயிற்சியாளர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here