பிரித்தானியா – சவூதி இடையில் புதிய போர்விமான கொள்வனவு உடன்படிக்கை!

0
171
Britain Signed Agreement Sell Fighter Planes Saudi Arabia

(Britain Signed Agreement Sell Fighter Planes Saudi Arabia)

பிரித்தானியாவுக்கு வருகை தந்த சவூதி இளவரசர் சல்மான் புதிய போர் விமான கொள்வனவு ஒன்றில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் பாதுகாப்புத் துறை செயலாளர் கேவின் வில்லியம்சன்னை, சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்த பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

எங்கள் மதிப்பு மிக்க கூட்டாளியுடன் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவது ஒரு நேர்மறையான நடவடிக்கை என பிஏஈ சிஸ்டம்ஸ் கூறியுள்ளது.

65 பில்லியன் பவுண்டு மதிப்பிலான வணிகம் மற்றும் முதலீட்டு இலக்கு செளதி இளவரசரின் பிரிட்டன் பயணத்தின் போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என பிரிட்டன் தரப்பு கூறியுள்ளது.

டைஃபூன் போர் விமானங்களுக்கான தேவைக் குறைந்ததால், 2,000 பேரின் வேலைகளைக் குறைப்பதாக பிஏஈ சிஸ்டம்ஸ் அறிவித்த பிறகு இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.

இந்த அறிவிப்பு, பிரிட்டனின் விமான உற்பத்தித் துறைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது. அதே நேரம், இது மனித உரிமைக்கான மற்றும் போருக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு அடியாக அமைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் மோசமான மனித உரிமை நடவடிக்கையால், அந்நாட்டுக்கு ஆயுதங்களை விற்க இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏமனில் நடக்கும் சண்டையில் அதிகளவு பொது மக்கள் இறப்பதற்கு செளதியின் விமானத் தாக்குதலே காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்த பிரிட்டனின் கவலைகளை, சவூதி இளவரசர் உடனான இரவு விருந்தின் போது, பிரிட்டன் பிரதமர் தெரிசா மே எழுப்பியதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு வெளியாவதற்கு முன்பே பிஏஈ சிஸ்டம்ஸின் பங்கு 2% உயர்ந்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here