பிரித்தானியாவில் டர்பனை கழற்ற மறுத்த சீக்கிய மாணவனுக்கு நேர்ந்த கொடுமை!

0
231
Britain Sikh Student Wearing Turban Dragged Out Night Club

(Britain Sikh Student Wearing Turban Dragged Out Night Club)

இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த சீக்கியர்கள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

தங்களது டர்பன் அணியும் கலாச்சாரத்தை கடைபிடிப்பதில் சீக்கியர்கள் மற்ற நாடுகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரட்டனில் தலைப்பாகை அணிந்ததால் சீக்கிய மாணவர் இரவு விடுதிக்குள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

அம்ரிக் சிங் (22) என்ற அந்த சீக்கிய மாணவர் பிரட்டனினில் சட்டம் படித்து வருகிறார்.

Image result for Britain Sikh Student Wearing Turban Dragged Out Night Club

அவர் நோட்டிங்காம்சைர் நகரில் உள்ள ரஷ் லேட் பார் என்ற இரவு விடுதியினுள் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் மனமுடைந்துவிட்டேன். எனது டர்பனை கழற்ற முடியாது என்று கூறியதற்காக என்னை வெளியே அனுப்பிவிட்டனர்.

நான் அவர்களிடம் அது சாதாரணமாக தலையில் அணியும் பொருள் இல்லை, அது என் மதத்தின் அடையாளம், மேலும் எனது முடியை பாதுகாக்கும் பொருள் என கூறினேன்.

அதை பொது இடத்தில் பயன்படுத்த எனக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர்களிடம் தெரியப்படுத்தினேன்.

ஆனால் அவர்கள் எனது டர்பனை கழற்ற சொன்னார்கள். நான் முடியாது என்ற கூறியதையடுத்து என்னை எனது நண்பர்களிடமிருந்து இழுத்து கொண்டுபோய் வெளியே தள்ளினார்கள்.

எனது மதத்தை பின்பற்றியதற்காக நான் வெளியில் அனுப்பப்பட்டது வேதனை அளிக்கிறது. எனது முன்னோர்கள் பிரிட்டிஷ் ராணுவத்திற்காக போரில் ஈடுபட்டுள்ளனர், என கூறினார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here