ஆப்கானிஸ்தானில் தலை விரித்தாடும் போதை பழக்கம்! 1 மில்லியன் பெண்கள் போதைக்கு அடிமை!

0
210
Afghanistan Health Department Says 1 Million Ladies Drugs Slaves

(Afghanistan Health Department Says 1 Million Ladies Drugs Slaves)

ஆப்கானிஸ்தானில் 1 மில்லியன் பெண்கள் போதைக்கு அடிமையாகி உள்ளதாக அந்நாட்டு பொது சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

நாட்டில் போதைப்பொருள் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மேலும் 1 லட்சம் குழந்தைகளும் போதைக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 20 போதை மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. என் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காபுலில் நடைபெற்ற விழாவில், கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைவர் ஷாக்பூர் யூசுப் கூறுகையில் ,

“போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. போதைப்பொருளுக்கு அடிமையான குழந்தைகளில் அனைவரும் 10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள். பெண்கள் பொதுவாக தங்கள் கணவன் மது அருந்துவதை பார்த்து அவர்களும் போதைக்கு அடிமையாகின்றனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்’ என கூறினார்.

இதுகுறித்து பேசிய மார்வா முசாவி என்ற பெண், ‘நான் என் கணவரை பார்த்து மது அருந்த பழகினேன். எங்களை மீட்பு முகாம்களில் வைத்து சிகிச்சை அளித்தால் மட்டும் பிரச்சனை தீராது.

முகாமை விட்டு வெளியே சென்றவுடன் மீண்டும் போதைப்பொருளை பயன்படுத்த தொடங்குவோம்.

அதனால் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களை தடுக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்’ என கூறினார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here