மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!

0
1450
Tamil Nadu Hindu Temple Guru Arrested Planned Murder Wife

(Tamil Nadu Hindu Temple Guru Arrested Planned Murder Wife)

இந்தியா தமிழகத்தில் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கோவில் குருக்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் குருக்களாக இருப்பவர் பாலகிருஷ்ணன். இவருக்கு ஞானபிரியா(24) என்ற மனைவி உள்ளார்.

இவர்கள் சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறையில் மோசமான காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாலகணேஷ் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரின் கட்டை அவிழ்த்துவிட்டு, வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது பிரியா வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பாலகணேஷை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஞானபிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஞான பிரியாவின் கழுத்தில் நகைகள் காணாமல் போயிருந்ததால், நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

இருப்பினும் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலகணேஷ் நினைவு திரும்பியவுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் பாலகணேஷ், நள்ளிரவில், கழிப்பறைக்கு செல்ல வெளியே வந்த போது, என்னை தாக்கிவிட்டு உள்ளே சென்ற இரண்டு நபர்கள், என் மனைவியை தாக்கி கொலை செய்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.

ஆனால் பொலிசாருக்கு பாலகணேஷ் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பொலிசார் பாலகிருஷ்ணனிடம் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருமணமாகி முன்றாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால், பிரியா மிகுந்த மனக் கஷ்டத்தில் இருந்தார்.

சம்பவ தினத்தன்று குழந்தை இல்லாததைப் பற்றி கூறி அவர் என்னிடம் சண்டை போட்டார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான், பிரியாவை கொலை செய்துவிட்டு, வீட்டின் வெளிப்புறம் தாழிட்டுவிட்டு, அதன் பின் தனது கை மற்றும் கால்களை குளியலறை அருகே வந்து கட்டி கொண்டு நாடகமாடியதாக பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

நடிகை அணிந்து வந்த கவுனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here