பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதல் நடாத்தலாம்! தயார் நிலையில் பாதுகாப்பு தரப்பு!

0
143
Russia May Attack Britain Defence Under Alert

(Russia May Attack Britain Defence Under Alert)

சிரியாவில் ராணுவ தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக பிரித்தானியா மீது ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தலாம் என பிரித்தானியா உளவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய கூட்டுப்படைகள் நேற்று முன்தினம் ஏவுகனை தாக்குதல் நடத்தியது.

அதற்காக பழிவாங்கும் நோக்கில் பிரித்தானியாவில் உள்ள முக்கிய போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகள், நீர் விநியோகம், எரிவாயு வலையமைப்புகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஆகியவற்றை குறிவைத்து ரஷ்ய ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது.

எனவே அவ்வாறு ரஷ்யா சைபர் தாக்குதலை நடத்தினால் அதை முறியடிக்க தேவையான முன்னெச்சரிக்கை திட்டங்களுடன் பிரித்தானிய உளவு அமைப்பான GCHQ மற்றும் பாதுகாப்புத்துறையை எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் Boris Johnson நேற்று தெரிவித்துள்ளார்.

இதுமட்டும் அல்லாமல் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பிற முக்கிய பிரமுகர்களின் அந்தரங்க ரகசியங்களையும் ரஷ்ய ஹேக்கர்கள் ஹேக் செய்து இணையத்தில் வெளியிட்டுவிடும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிரது. எனவே அவ்வாறு நடைபெறாமல் இருக்க தேவையான தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

கடந்த இரவு, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள தகவலில் சிரியா ஏவுகனை தாக்குதலுக்கு பிறகு இணையத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் ட்ரோலர்களின்(trollers) எண்ணிக்கையில் 2,000 சதவிகிதம் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இந்த தகவல்களின் மூலம் ரஷ்ய ஹேக்கர்கள் பற்றிய கவலை இன்னும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து நேற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் அமெரிக்காவுடன் இணைந்து பிரித்தானியா சிரியாவில் தாக்குதல் நடத்தியது பற்றி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் பிரதமருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மே செயலை விமர்சனம் செய்தால் சிரியாவில் நடைபெற்ற ரசாயன தாக்குதல் பிரித்தானிய தெருக்களிலும் நடைபெற்றுவிடக்கூடாது என்ற பிரித்தானியாவின் தேசிய நலனை கருத்தில் கொண்டு தான் இந்த தாக்குதல் நடத்தியதாக தெரசா மே அறிக்கை அளிக்கவும் வாய்ப்புள்ளது.

பிரித்தானியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளின் மீது ஏற்கெனவே சைபர் தக்குதல் நடத்தியுள்ள ரஷ்யா ஹேக்கர்கள் மிகவும் திறமைவாய்ந்தவர்களாக இருப்பதால் தற்போது மீண்டும் பிரித்தானியாவின் முக்கிய தளங்களின் மீது தாக்குதல் நடத்திவிடுவார்களோ எனும் அச்சத்தில் பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகள் உள்ளனர்.

பிரித்தானியாவை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த சைபர் தாக்குதல்கள் இனி நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தாகிவிட்டது எனவே அவர்கள் என்ன தாக்குதல் நடத்தினாலும் அதை வெற்றிகரமாக முறியடிப்போம் என பிரித்தானிய சைபர் பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் Ciaran Martin தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!

வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!

பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here