பிரமாண்டமாக நடைபெற்றது சவூதி ஜெனாத்ரியா கலைநிகழ்வு ! இந்தியா சார்பில் சுஷ்மா ஸ்வராஜ்சும் பங்குபற்றினார்!

0
130
Indian External Affairs Minister Sushma-Swaraj Participates Saudi Event

(Indian External Affairs Minister Sushma-Swaraj Participates Saudi Event)

சவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் ஜெனாத்ரியா கலைநிகழ்ச்சியை அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி அடில் அல் ஜுபிருடன், சுஷ்மா சுவராஜ் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

சவூதி அரேபியாவின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரியாத் அருகே உள்ள ஜெனத்ரியா என்ற இடத்தில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியை அந்நாட்டு அரசு நடத்துகிறது.

Image result for Janadriyah Festival

Related image

பண்டைய காலத்திலேயே இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், 1985-ம் ஆண்டு முதல் மன்னர் தலைமையில் இந்த விழா நடைபெற்று வருகிறது.

ஓட்டக பந்தயம், குதிரை பந்தயம், நடனம், புத்தக கண்காட்சி, சவூதி அரேபிய அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிகள் ஆகியவை இதில் இடம்பெறும்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஜெனத்ரியா கலைநிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு மன்னர் சல்மான் இந்தியாவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.

Image result for Indian External Affairs Minister Sushma-Swaraj Participates Janadriyah Festival

இதையடுத்து, மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் இணை மந்திரி வி.கே.சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள உற்பத்தி பொருள்களை பேட்டரி காரில் அமர்ந்தபடி, அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி அடில் அல் ஜுபிருடன், சுஷ்மா சுவராஜ் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

இந்த கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் யோகா, இஸ்ரோ, டிஜிட்டல் இந்தியா ஆகிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here