துருக்கி இராணுவ ஹெலிகாப்டரை குர்திஷ் போராளிகள் சுட்டு வீழ்த்தினர் !

0
96
Kurdish Militants Shot Down Turkish Military Helicopter

(Kurdish Militants Shot Down Turkish Military Helicopter)

உள்நாட்டுப் போராலும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தாலும் நிலைகுலைந்து கிடக்கும் சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் மற்றும் அருகாமையில் உள்ள மாகாணங்களையொட்டிய தங்கள் நாட்டு எல்லைப்பகுதியில் 12 கண்காணிப்பு முகாம்களை துருக்கி அரசு அமைத்துள்ளது.

துருக்கி நாட்டு விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் இங்கிருந்து புறப்பட்டு சென்று சிரியா அதிபரின் ஆட்சியை எதிர்த்துப் போராடிவரும் குர்திஷ் போராளிகள்மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், சிரியாவின் வடபகுதியில் உள்ள ஆப்ரின் நகரில் உள்ள போராளிகள் முகாம்கள் மீது நேற்று துருக்கி நடத்திய வான்வழி தாக்குதல்களில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலின்போது துருக்கி நாட்டுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரை குர்திஷ் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும், இதில் இரு விமானிகள் உயிரிழந்ததாகவும் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Image result for Turkish helicopter shot down by Kurdish militia in Syria's Afrin

இஸ்தான்புல் நகரில் தனது கட்சியினரிடையே இந்த தகவலை நேற்று தெரிவித்த எர்டோகன், ‘நாம் போரில் இருப்பதால் இதுபோன்ற இழப்புகள் எல்லாம் ஏற்படும். ஒரு ஹெலிகாப்டரை நாம் இழந்திருக்கலாம். ஆனால், இதற்கான விலையை அவர்கள் தர வேண்டி இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here