இலண்டன் கழுத்து வெட்டி பிரிகேடியருக்கு கண்டனம் தெரிவித்த சிப்பிங் பார்னெட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்!

0
103
London Parliament Member Theresa Villiers Issue Statement Support Tamils

(London Parliament Member Theresa Villiers Issue Statement Support Tamils)

இலண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் மீது அச்சுறுத்தும் வகையில் மிரட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாட்டிற்கு, சிப்பிங் பார்னெட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா வில்லயர்ஸ் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரினால் கண்டன ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Image result for London Parliament Member Theresa Villiers

குறித்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயம்,

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் மீதான பிரிகேடியரின் செயற்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவரது செயற்பாடானது, இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான நடத்தைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேற தமிழ் மக்களை மிகவும் துன்பமடையச் செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவர் செயற்பாடு குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என உள்துறை அமைச்சையும், வெளியுறவுத்துறை அமைச்சையும் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுதந்திரத் தினத்தன்று, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கழுத்தை அறுப்பதைப் போன்ற சைகையை, லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ காண்பித்தமை குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புக்களையடுத்து அவரை பதவி இடைநிறுத்தம் செய்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருந்தது. எனினும், அவரை மீளவும் பதவியில் அமர்த்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here