சிரியாவில் தினமும் 5 மணிநேர போர்நிறுத்தம் – ரஷ்ய அதிபர் உத்தரவு!

0
311
Russia President Putin Orders 5 Hours War Cease Syria

(Russia President Putin Orders 5 Hours War Cease Syria)

சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டுள்ளார்.

இது இன்று செவ்வாய்கிழமை முதல் தொடங்கும்; மேலும், பொதுமக்கள் வெளியேறுவதற்கான “மனிதாபிமான பாதைகள்” உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டமாஸ்கஸிற்கு அருகில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் 393,000 பொதுமக்கள் சிக்கியுள்ளனர். அந்த பகுதி, ரஷியாவின் ஆதரவோடு அரசு படைகளால் தீவிர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

எட்டு நாட்களில் 560 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

Image result for syria war children dead

ரஷியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொயகு இந்த “மனிதாபிமான போர் நிறுத்தம்” குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் இந்த போர் நிறுத்தம், உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் 2 மணி வரை தினமும் தொடரும் என அவர் தெரிவித்தார்.

மக்கள் தப்பி செல்வதற்கான பாதைகளை அமைக்க சிரியா செம்பிறைச் சங்கம் உதவும் எனவும் மக்களுக்கு இது குறித்த தகவல்கள் துண்டுச் சீட்டுகள் மூலமாகவும், குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்கள் மூலமாகவும் செய்திகள் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here