ஸ்ரீதேவி உடலை சுமந்து வந்தது அம்பானி விமானம்! இன்று தீயுடன் சங்கமிக்கிறது சினிமா துறையின் மறக்கமுடியாத மயில்!

0
1075
Actress Sridevi Final Tribute Mumbai Today

(Actress Sridevi Final Tribute Mumbai Today)

நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர தொழில் அதிபர் அனில் அம்பானி தனி விமானத்தை கடந்த 25-ந் திகதி துபாய்க்கு அனுப்பிவைத்தார்.

இந்த தனி விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்தது.

இதையடுத்து ஸ்ரீதேவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, துபாய் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது.

நேற்று மாலை வரை 3 நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேவேளை , மும்பை விமான நிலையத்திலிருந்து, அந்தேரியில் உள்ள இல்லத்திற்கு ஸ்ரீதேவி உடல் கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீதேவியின் இல்லத்தில் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விஐபிக்கள் அவரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் அஞ்சலிக்காக ஸ்ரீதேவியின் உடல், மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இன்று காலை 9.30 மணி முதல்12.30 மணி வரை வைக்கப்படவுள்ளதாகவும், பின்னர் பிற்பகல் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கி மாலை 3.30 மணிக்கு வில்லிபார்லியில் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு லட்சக்கணக்கானோர் வருகை தர வாய்ப்பு இருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here