பிரித்தானியாவில் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படும் சிங்கள பெண்மணி!

0
149
Britain Sinhalese Girls Supports Tamil Eelam People

(Britain Sinhalese Girls Supports Tamil Eelam People)

பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி தமிழ் தகவல் நடுவத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து சந்தித்து இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

அந்தவகையில எல்தம் (Eltham) தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் க்லிவே இப்பொர்ட் (Clive Efford) அவர்களை சந்தனகுமார் தசிகரன் தலைமையில் இராஜேந்திரம் சுதன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர் சந்தித்தனர்.

இச் சந்திப்பின் போது நவீனரக ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களுக்கெதிராக நடாத்தப்பட்டு பல உயிர்களைக் காவுகொண்ட கொடிய யுத்தத்தின் பின்னரும் தற்போதும் இலங்கை அரசின் இரும்புக்கரம் ஓங்கியே காணப்படுகிறது.

இதற்கு வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவே பிரதான காரணமாக அமைகிறது. அந்த வகையில் ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடுகளில் ஒன்றான பிரித்தானியா அதனை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் அரசிற்கு வலியுறுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை அண்மையில் இலங்கையின் சுதந்திர தினத்தை புறக்கணித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கைத் தூதரக அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவினால் தமக்கு விடப்பட்ட கொலை அச்சுறுத்தலையும் அவருக்கு விளக்கினார்கள்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ அவர்களின் கொலைமிரட்டல் வீடியோவை பதிவு செய்த சபேஷ்ராஜ் தமக்கு மிரட்டல்கள் வந்திருப்பதையும் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மேலும் ஆயுத விற்பனையை நிறுத்துதல் தொடர்பான சந்திப்புக்களை நடாத்தி வரும் தமிழர் தகவல் நடுவத்தின் பிரதான ஏற்பாட்டாளர் அஷந்தன் தியாகராஜாவும் கலந்து கொண்டார்.

அத்துடன் குறித்த சந்திப்பில் பங்கு பற்றிய இலங்கை பேரினவாத இனத்தைச் சேர்ந்த அம்பாத்தகே நிஷாந்தி பிரியங்கா, தன் கண்முன்னரே இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான மிலேச்சத் தனமான இலங்கை அரசின் தாக்குதல்கள் நடைபெற்றதை தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உருப்பினர் க்லிவே எப்பொர்ட் (Clive Efford) இற்கு எடுத்துக் கூறினார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கிலிவே எப்பொர்ட் (Clive Efford) பிரித்தானிய வர்த்தக செயலருக்கும், வெளிவிவகார செயலருக்கும் குறித்த விடயம் தொடர்பாக தெரிவிப்பதாக உறுதியளித்தார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here