பிரித்தானியா பாராளுமன்றத்தில் இலங்கைக்கான ஆயுத விற்பனை தொடர்பில் வலுக்கும் எதிர்ப்பு!

0
166
British Parliament Members Raise Questions Sri Lanka Arms Dealing

(British Parliament Members Raise Questions Sri Lanka Arms Dealing)

பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் எடுத்து வரும் கடும் முயற்சிகளைத் தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆயுத விற்பனையை நிறுத்துவதற்கு சார்பாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இது தொடர்பான கேள்விகளையும் பாராளுமன்றில் எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் 26.02.2018 அன்று Greenwich and Woolwich பாராளுமன்ற உறுப்பினர் Matthew Pennycook அவர்களை புலம்பெயர் தமிழரான சிவராஜா சிவசுதன் தலைமையில் பத்மலோஜினி குகேந்திரன், செல்வராசா சபேசன்,மயூரன் சதானந்தன், வரதராஜா மோகனரூபன் மற்றும் தமிழர் தகவல் நடுவத்தின் பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்துதல் தொடர்பான பிரதான ஏற்பாட்டாளர் அஷந்தன் தியாகராஜா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கைக்கான ஆயுத விற்பனை தொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடாத்தவும்,ஆயுத விற்பனையால் ஈழத்தமிழர்கள் தொடரச்சியாக பாதிக்கப்படுவதனை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் Matthew Pennycook உங்கள் கோரிக்கை பற்றி ஏற்கனவே நான் அறிந்திருக்கிறேன் என்றும் Lewisham Deptford தொகுதி நா.உ Vicky Foxcroft உட்பட்ட பிற பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதாகவும், ஆயுத விற்பனை தொடர்பில் வியாபார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த கோரி நடாத்தப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்சந்திப்புகள் யாவும் தமிழர் தகவல் நடுவத்தினால் ஏற்பாடுசெய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here