சிரியா கொடிய போரை கூகிளில் அதிகம் தேடிய தமிழர்கள்!

0
217
Tamil People Mostly Search Syria War Google Engine

(Tamil People Mostly Search Syria War Google Engine)

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.

சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் 700 பேர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த 7 நாட்களில்தான் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. முக்கியமாக சிரியா (syria) என்று ஆங்கிலத்திலும், சிரியா தமிழ் (syria tamil) என்றும் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதன்பின் சிரியா புகைப்படங்கள், வீடியோக்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை, போர் காரணம், சேவ் சிரியா (Save Syria) என்ற வார்த்தைகளும் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது.

இதில் தமிழகத்தை சேர்ந்த ஆவடிதான் முதல் இடம் பிடித்திருக்கிறது. ஆவடி பகுதியில் உள்ள மக்கள் அதிகமாக சிரியா (syria) என்று தேடி இருக்கிறார்கள். மூன்றாம் இடத்தில் சென்னையின் சிறுசேரி பகுதியும், 5-வது இடத்தில் சென்னையை சேர்ந்த காட்டாங்குளத்தூரும் இருக்கிறது.

8,9,10 ஆகிய இடங்களில் நாகர்கோவில், தஞ்சாவூர் ,மதுரை ஆகிய இடங்கள் இருக்கிறது. இவையெல்லாம் உலக அளவில் வந்த இடங்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்தியர்கள்தான் இது பற்றி அதிகம் தேடி இருக்கிறார்கள்.

முதல் 50 இடத்தில் பெரும்பாலும் தமிழ்நாட்டு பகுதிகள்தான் இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் சிரியா குறித்து தேடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் இப்படி தேடி படித்ததற்கு நிறைய உளவியல் காரணங்கள் இருக்கிறது. முக்கியமாக இலங்கை போர் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் போரை முன்னின்று நடத்தும் ஈராக், ரஷியா, அமெரிக்க போன்ற நாடுகள் மிகவும் குறைவாகவே தேடி இருக்கிறது.

இந்த நாடுகள் அனைத்தும் 30-வது இடத்திற்கு பின்பே இருக்கிறார்கள். முக்கியமாக ரஷியா 63 இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here