பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்ற கற்க கசடற இறுதிப்போட்டி!

0
122
Uk Tamil Youth Organization Thirukkural 2018 Competition

(Uk Tamil Youth Organization Thirukkural 2018 Competition)

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கற்க கசடற திருக்குறள் மனனம் செய்யும் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மதம் மொழி அதன் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் அருமை பெருமையை எடுத்துரைத்து எம் தேசிய தலைவரின் கனவை நினைவாக்கும் வண்ணம் தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிப்பதே கற்க கசடற என்னும் போட்டியின் நோக்கமாகும்.

கற்க கசடற தென் மேற்கு, வட மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு ஆகிய நான்கு இடங்களிலும் அரைச்சுற்று இடம் பெற்று அதில் தெரிவான மாணவர்கள் இறுதிசுற்றில் பங்கேற்று அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து சிறப்பினை பெற்றார்கள்.

இரண்டு வயது முதல் பெரியவர்கள் வரை இந்த போட்டியில் பங்குபெறுவது இளையோர்களுக்கு பெரும் உற்சாகத்தையும் உந்துசக்தியையும் கொடுக்கின்றது.

முக்கியமாக பெற்றோர்களின் ஆர்வத்தையும் அவர்களின் விடாமுயற்சியையும் பார்க்கும் பொது அளவுகடந்த நம்பிக்கையினை கொடுக்கின்றது.

ஒவ்வொரு வருடமும் தாய்மொழி நாளை முன்னிட்டு இடம்பெறும் இப் போட்டியில் நூறிற்கும் அதிகமான தமிழ் பிள்ளைகள் பங்கெடுத்து தமது ஆற்றல்களை வெளிக்கொண்டு வந்தார்கள்.

போட்டியின் இடைவேளையில் தமிழ் மொழி சார்ந்த பல விளையாட்டுக்கள் சிறுவர்களுக்கு வைக்கப்படடன.

இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கேடயமும் ஆறுதல் பரிசாக சக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது நிகழ்வு.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here